Saturday, April 10, 2010

என் மெயில் பாக்ஸ்...

நான் வணக்கம் சொல்ல காத்திருக்கும்,
குட் மார்னிங் மெயில்கள் உணர்த்தும்...
நண்பர்களுக்கு காலையிலே என் ஞாபகம் வந்ததை !!!

யாரோ ஒருவர் அனுப்பிய பார்வர்ட் மெயில்கள் உணர்த்தும்...
பல நிருவனகளில் பெஞ்ச் இருப்பதை!!

ஆதாரத்துடன் வரும் தென் துருவ பனிமலை மெயில்கள் உணர்த்தும்...
இந்த உலகம் தொடும் தொலைவில் இருப்பதை!!!

பல நிறுவனகள் அனுப்பும் வேலை வாய்ப்பு மெயில்உணர்த்தும...
இன்னும் எனக்கு வேலை கிடைத்ததை
இந்த உலகம் ஏற்று கொள்ளாததை!!!

காலேஜ் க்ரூப்ஸ் இருந்து வரும் மெயில்கள் உணர்த்தும்...
தொலைவில் இருக்கும் என் கல்லூரி நண்பர்கள் நலம் என்பதை!!!

ரயில்வே reservation மைல்கள் உணர்த்தும்...
அம்மாவை பார்க்கும் நாள் அருகில் இருப்பதை!!!

icici பேங்க் ஸ்டேட்மென்ட் மெயில்கள் உணர்த்தும்...
கடந்த மாத சம்பளம் தண்ணியாய் கரைந்ததை!!!

என்றோ என்னுடன் வேலை செய்த தோழி
அனுப்பும் மெயில்கள் உணர்த்தும்..
இன்னும் அவர் மனதில் நான் இருப்பதை!!!

யாரோ ஏழுதிய கவிதைகளால் நிரம்பும்,
என் archive folders உணர்த்தும் ...
என்ன கவிதைகளால் நிறைய போகும் அடுத்தவர் மெயில் பொஎல்டெர்ஸ !!!

நண்பர்கள் சிரிக்கும் புகைப்பட மெயில்கள் உணர்த்தும்...
பல சந்தூஷ தருணங்களை!!!

வேலை நேரத்தில் நண்பர்கள் அனுப்பும்,
மொக்கை மெயில்கள் உணர்த்தும்..
அவர்களும் வெட்டி தான் என்பதை....

மாத கடைசியில் வரும் பெ-ஸ்லிப் மைல்கள் உணர்த்தும்...
என் உழைப்பின் அர்த்தத்தை!!!

சில நேரம் என் இன்பாக்ஸ் மெயில்களின்
எண்ணிகை உணர்த்தும் ....
யாரும் என்னை மதிக்கவில்லை என்பதை!!!

யெல்லா மெயில்களும் இன்பத்தையே கொண்டு வரும் போது ...
என்ன டீம் leadஅனுப்பும் மெயில்கள் mattum உணர்த்தும்...
இன்று என்ன இரவு தூக்கம் தொலைந்ததை...

appoothu மட்டும் என் மனம் உணரும் மைல்பாக்ஸ் வைத்திருக்கும் கொடுமையை...

தினம்.. தினம்...

அதிகாலை விழிப்பு...

மணி பார்த்து பார்த்து குட்டி குட்டி தூக்கம்...

சூடான காபி..

இதமான குளியல்...

கொஞ்சமாக அலங்காரம்...

வெந்தும் வேகாத ஹோஸ்டேல் தோசை...

குரங்கு குட்டி போல தொங்கும் ஷேர் ஆட்டோ பயணம்...

கண்ணுக்கெட்டும் தூரத்தில் தெரியும் அலுவலகம்...

அருகில் செல்ல செல்ல நகர்ந்து கொண்டே போகும் வான் உயர்ந்த கட்டிடங்கள்...

அலுவலக நேரம் கடந்து விட்டதை உணர்த்தும் செல்போன் ரீமைண்டேர்...

மன கண்ணில் தெரியும் லேட் register...

ஆங்காங்கே தெரியும் கோவிலுக்கு வைக்கும் சிறு சிறு வேண்டுதல்கள்..

FM மோடு நடை பயணம்...

இவை அனைத்தையும் கடந்து வருகிறேன் ..

கணினி பொறியாளார் என்ற பெருமையில்...

பெஞ்ச் ப்ரொஜெக்டில் வேலை செய்ய....!!!